சென்னையில் திடீரென்று நள்ளிரவில் கடல் உள்வாங்கியது - மக்கள் பீதி
சென்னையில் நள்ளிரவில் திடீரென்று கடல் உள்வாங்கியதால் மக்கள் பீதி அடைந்திருக்கிறார்கள்.
கடந்த டிசம்பர் 14ம் தேதி அன்று இந்தோனேஷியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. மௌமரே நகருக்கு அருகே 7.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகி இருந்தது. இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கம் காரணமாக இந்தோனேசியாவில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதனையடுத்து, அதே நாளில் புதுச்சேரி கடற்கரையில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது.
புதுச்சேரியிலும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதன் காரணமாக, கடற்கரையில் இருந்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டார்கள்.
இந்நிலையில், சென்னையில் நள்ளிரவில் மெரினா, பட்டினப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் 10-15 மீட்டருக்கு கடல் உள்வாங்கியது. சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக கடல் உள்வாங்கியதால் அப்பகுதி மக்கள் பீதி அடைந்திருக்கிறார்கள்.