மாணவர்களுக்கு இலவச spoken English பயிற்சி - எந்தெந்த வகுப்பு வரைன்னு தெரியுமா?
தமிழகம் முழுவதும் மாணவர்களுக்கு ஆங்கில பயிற்சி அளிக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்திருக்கிறது.
இது குறித்து பள்ளிக்கல்வித்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது -
அரசு பள்ளியில் பயிலும் 4ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு spoken English பயிற்சி வழங்கப்படும்.
இந்த பயிற்சி வழங்க ஆங்கிலப் புலமை வாய்ந்த ஆசிரியர்களை தேர்வு செய்கிறது. ஆசிரியர்களுக்கு தேர்வு நடத்தி ஆங்கில புலமையை பரிசோதிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
ஆசிரியர்களுக்கு தேர்வு நடத்தி ஆங்கிலப் புலமை உடையவர்கள் அடையாளம் காண கல்வி அலுவலர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
ஆன்லைன் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான ஆசிரியர்களுக்கு வருகின்ற 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் பயிற்சி வகுப்புகள் வழங்கப்படும். தமிழக சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்ட வாறு அரசு பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் spoken English பயிற்சி வழங்கப்படும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழில் ஆலயத்தில் அதிகளவான ஒளி பாவனை! 120க்கும் மேற்பட்ட பக்தர்கள் கண் பிரச்சினையால் வைத்தியசாலையில் IBC Tamil
திருவிழா நிகழ்வில் கண் பாதிப்புக்குள்ளான பக்தர்கள்: தென் கயிலை ஆதீனம் விடுத்துள்ள கோரிக்கை IBC Tamil