ஸ்டூடண்ட்ஸ் மனமோ நந்தவனமே : மாணவர்களை ஆரத்தி எடுத்து வரவேற்ற ஆசிரியர்கள்

school opening tamilnadu
By Irumporai Sep 01, 2021 06:47 AM GMT
Report

தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டதை தொடர்ந்து மாணவர்களுக்கு இனிப்பு வழங்கி, ஆரத்தி எடுத்து ஆசிரியர்கள் வரவேற்றனர். பொதுவாக பள்ளிகள் செல்வது மாணவர்களுக்கு கசப்பான அனுபவம் தான், ஆனால் கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள் கல்லுரிகள் முழுமையாக செயல்படவில்லை .

இந்த நிலையில் தமிழகத்தில் கடந்த மே மாதம் முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. தற்போது வரும் வரும்15ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை காரணமாக வகுப்புகள் ஆன்லைன் மூலம் நடைபெற்று வந்தநிலையில், இன்று முதல் தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லுாரிகளை திறந்து நேரடி வகுப்புகளை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஸ்டூடண்ட்ஸ்  மனமோ நந்தவனமே : மாணவர்களை ஆரத்தி எடுத்து வரவேற்ற ஆசிரியர்கள் | Tamilnadu School Opening Teachers Take Students

இந்நிலையில், நீண்ட நாட்களுக்கு பிறகு மாணவர்கள் பள்ளிக்கு வந்ததால் சில பள்ளிகளில் மாணவர்களுக்கு சிவப்பு கம்பளம் விரித்து வரவரவேற்பு கொடுக்கப்பட்டது. மேலும், சில பள்ளிகளில் மாணவர்களுக்கு இனிப்பு வழங்கி, ஆரத்தி எடுத்து ஆசிரியர்கள் வரவேற்றனர்.

நுழைவு வாயிலில் மாணவிகள், மாணவர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டு வகுப்பறைக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு ஆசிரியர்களும் மாணவர்களும் சந்திக்கின்றனர் .மேலும், வகுப்பறைக்குள் நுழையும் முன்பு சோப்பு திரவம் பயன்படுத்தி கைகளை தண்ணீரில் கழுவும் ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.

96 சதவீத ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்கள் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். வகுப்புக்கு 20 மாணவர்கள் என்ற அடிப்படையில் அமர வைத்து பாடங்கள் நடத்தப்பட்டன.