தமிழகத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்

tamilnadu school leave rain updates
By Fathima Nov 08, 2021 03:25 AM GMT
Report

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், நாமக்கல், கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, நாகை, கரூர், புதுக்கோட்டை, ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.  

மேலும் மயிலாடுதுறை, தஞ்சாவூர், கடலூர், திருவண்ணாமலை, சேலம், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு ஏற்கனவே 2 நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.