"ஒற்றுமையாக இருந்தால் தான் எதிரிகளை வெல்ல முடியும்’ - சசிகலா
report
tamilnadu-sasikala-
By Nandhini
அதிமுகவினர் ஒற்றுமையுடன் இருந்தால் மட்டுமே எதிரிகளை வெல்ல முடியும் என்று வி.கே.சசிகலா அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது -
அதிமுக தலைமை அலுவலகத்தில் ராஜேஷ் எனும் தொண்டர் தாக்கப்பட்டது வேதனையை அளிக்கிறது. தொண்டர்களின் நலனின் அக்கறை செலுத்தும்போதுதான், அதிமுகவின் மீது நல்ல எண்ணம் உருவாகும். ஒரு இயக்கத்துக்கு தேவை, கொடி பிடிக்கும் தொண்டர்களே தவிர, தடி எடுக்கும் குண்டர்கள் அல்ல. ஒற்றுமையுடன் இருந்தால் மட்டுமே எதிரிகளை வெல்ல முடியும் என்பதன் அவசியத்தை உணர வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
