எடப்பாடி பழனிசாமி திடீரென மருத்துவமனையில் அனுமதி
கடந்த ஏப்ரல் மாதம் எடப்பாடி பழனிசாமி, நடைபெற்ற சட்டமன்ற தேர்தலுக்காக 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தை மேற்கொண்டார்.
தேர்தல் நடந்து முடிந்த பிறகு திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது, அவருக்கு குடலிறக்க அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சை முடிந்து எடப்பாடி பழனிசாமி கடந்த ஏப்ரல் மாதம் 20ம் தேதி வீடு திரும்பினார். சில நாட்கள் ஓய்வுக்கு பிறகு மீண்டும் பணிகளை தொடங்கினார்.
அறுவை சிகிச்சை செய்துக் கொண்டதால் அவ்வப்போது எடப்பாடி பழனிசாமி மருத்துவமனையில் பரிசோதனைகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் உள்ள எம்.ஜி.எம் மருத்துவமனையில் இன்று மீண்டும் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
ஏற்கனவே குடலிறக்கம் அறுவை சிகிச்சை செய்துள்ளதால் எண்டோஸ்கோபி செய்துக் கொள்வதற்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.