மேகம் மூட்டமெல்லாம் இல்லப்பா... மரத்துக்கும் சற்று உயரத்தில் தான் பறந்தது - நேரில் பார்த்தவர் கொடுத்த தகவல்
ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் 13 பேர் உயிரிழந்த நிலையில், தலைமை ராணுவத் தளபதி பிபின் ராவத் உயிரிழந்தாக தகவல் வெளியாகி உள்ளது.
நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே, காட்டேரி மலைப்பகுதில் ராணுவ ஹெலிகாப்டர் வானில் பறந்துக் கொண்டிருந்த போது, பனிமூட்டம் காரணமாக ஹெலிகாப்டர் கீழே விழுந்து வெடித்து சிதறி விபத்துக்குள்ளானது.
இந்த ஹெலிகாப்டர் விபத்தில், 14 பேர் பயணம் செய்தனர். இந்த விபத்தில் படுகாயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு வெலிங்டன் ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். எனினும் சிகிச்சைப் பலனின்றி, 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் ஒரு ஆண் மட்டும் சிகிச்சையில் உள்ளார்.
இது குறித்து இந்திய விமானப் படை இன்று வெளியிட்டுள்ள டுவீட்டில், ‘துரதிர்ஷ்டவசமான இந்த விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரின் மனைவில் மதுலிகா ராவத் மற்றும் 11 பேர் உயிரிழந்தனர்’ என்று தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஹெலிகாப்டர் விபத்தை நேரில் பார்த்த ஒருவர் விபத்து குறித்து பேசிய வீடியோ தற்போது சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், மேகம் மூட்டமெல்லாம் இல்லப்பா... ஹெலிகாப்டர் மரத்துக்கும் சற்று உயரத்தில் தான் பறந்தது. போய் திரும்பியதும் மரத்தில் மோதியது. பயங்கர சத்தம் கேட்டது. உடனடியாக இங்கிருந்தவர்கள் ஓடிச்சென்று பார்த்தார்கள்’ என்று கூறியுள்ளார்.
தற்போது இந்த வீடியோ சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
According to this eyewitness: Helicopter (carrying Chief of Defence Staff Gen #BipinRawat & others) flew at very low altitude, weather was clear, took a turn & crashed after hitting a jackfruit tree with loud explosion #HelicopterCrash #IAFMi17V5 #IndianArmy #Coonoor #TamilNadu pic.twitter.com/fLnhfxFGJm
— Vijay Kumar S (@vijaythehindu) December 8, 2021