சென்னையில் இன்று அனைத்து கோயில்கள் திறக்கப்பட்டன - பக்தர்கள் பெருமகிழ்ச்சி
தமிழகத்தில் நேற்று ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. அதில் பண்டிகை காலங்களில் பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக கடைகளுக்கு செல்வதை கருத்தில் கொண்டு ஏற்கனவே செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ள அனைத்து வகை கடைகள் உணவகங்கள் மற்றும் இரவு 11 மணி வரை இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
அனைத்து வழிபாட்டு தளங்களிலும் வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு உட்பட அனைத்து நாட்களிலும் பொதுமக்கள் வழிபாட்டிற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதே போன்று அனைத்து தனிப்பயிற்சி நிலையங்கள் அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் ஆகியவை செயல்பட அனுமதிக்கப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து நாட்களிலும் கோயில்கள் திறக்க அனுமதி வழங்கப்பட்டிருப்பது பொதுமக்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கொரோனா பரவலை கருத்தில் கொண்டு வார இறுதி நாட்களில் கோயில்கள் மூடப்பட்ட நிலையில், கோயில்களை திறக்கக்கோரி பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதனையடுத்து, விஜயதசமி தினமான இன்று கோயில்களை திறக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டு, உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், தமிழகத்தில் அனைத்து நாட்களிலும் வழிபாட்டு தலங்களை திறக்க அரசு அனுமதி வழங்கி இருக்கிறது.
இந்நிலையில், வார இறுதி நாட்களில் வழிபாட்டு தலங்களை திறக்க தமிழ்நாடு அரசு நேற்று அனுமதி அளித்துள்ளது. இதனையடுத்து, விஜயதசமி நாளான இன்று சென்னையில் கோவில்கள் திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்து வருகிறார்கள்.
குறிப்பாக குழந்தைகளை பள்ளியில் சேர்க்க ஏதுவாக பெற்றோர்கள் கோயில்களுக்கு சென்று அரிசியில் எழுதி அவர்களின் கல்வி பயணத்தை தொடங்கி வைப்பர். இதனால் கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அலை மோதுகிறது. இருப்பினும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி சாமி தரிசனம் செய்ய அரசு அறிவுறுத்தி இருக்கிறது.