இருளர் சமூக மாணவர்களுக்காக தமிழக முதலமைச்சரிடம் நடிகர் சூர்யா ரூ.1 கோடி நிதியுதவி

tamilnadu-samugam-surya-funding
By Nandhini Nov 01, 2021 09:12 AM GMT
Report

பழங்குடி இருளர் இன மாணவர்களின் கல்வி நலனுக்காக தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலினிடம், நடிகர் சூர்யா தங்கள் 2-டி நிறுவனம் சார்பாக ரூ.1 கோடி நிதியுதவி வழங்கினார்.

நடிகர் சூர்யா நடிப்பில் தா.செ ஞானவேல் இயக்கத்தில் நாளை அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ‘ஜெய் பீம்’ படம் வெளியாக இருக்கிறது. இப்படத்தில், காலங்காலமாக சமூகத்தில் புறக்கணிக்கப்பட்டு வரும் பழங்குடியின இருளர் மக்களின் வலியை இப்படத்தில் காண்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நடிகர் சூர்யா தங்கள் 2-டி எண்டெர்டைன்மெண்ட் நிறுவனம் சார்பாக ரூ.1 கோடியை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் நிதியுதவியாக அளித்தார். சூர்யாவுடன் அவரது மனைவி ஜோதிகா, துர்கா ஸ்டாலின், நீதிபதி சந்துரு, இருளர் சமூக மக்களும் உடனிருந்தனர். 

இருளர் சமூக மாணவர்களுக்காக தமிழக முதலமைச்சரிடம் நடிகர் சூர்யா ரூ.1 கோடி நிதியுதவி | Tamilnadu Samugam Surya Funding