சிறைவாசம் முடிந்து விடுதலையானார் சுதாகரன்

tamilnadu-samugam-sudhakaran-release-
By Nandhini Oct 16, 2021 06:47 AM GMT
Report

சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்த சுதாகரன் இன்று விடுதலையானார். சிறையில் இருக்கும் சுதாகரனின் தண்டனை காலம் இன்றுடன் முடிவடைந்துள்ளது. அவரை வரவேற்று அழைத்து செல்வதற்காக செல்ல அவரது குடும்பத்தினர் பெங்களூரில் முகாமிட்டிருக்கின்றனர் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டு 9 மாத சிறை தண்டனை முடிந்து பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து சுதாகரன் இன்று விடுதலையாகி இருக்கிறார். சுதாகரன் அபராதம் செலுத்தாததால் கூடுதலாக ஓராண்டு சிறை தண்டனை அனுபவித்து வந்தார். இந்நிலையில், இன்று சிறையிலிருந்து விடுதலையாகி உள்ளார்.

கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15ம் தேதி, சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார்கள். இதில் சசிகலா, இளவரசி ஆகியோர் தண்டனை காலம் முடிந்ததும் தங்களுக்கு விதிக்கப்பட்ட அபராதத்தொகையை செலுத்தினர்.

இதனால், அவர்கள் இருவரும் கடந்த ஜனவரி மாதம் 27ம் தேதி பரப்பன அக்ரஹாரா சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டனர். சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை வாசத்தை முடித்த பிறகு அபராத தொகையை செலுத்தாததால், ஓராண்டு சிறை தண்டனை வழக்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனால், சுதாகரன் கூடுதலாக சிறைத்தண்டனை அனுபவித்தார். அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரை சிறையில் இருக்க வேண்டிய நிலை இருந்தது. இந்நிலையில், 89 நாட்களுக்கு முன்பாகவே சுதாகரன் விடுதலை ஆகி இருக்கிறார்.