‘வலுக்கட்டாயமாக மாணவிகளை வன்கொடுமை செய்த சிவசங்கர் பாபா’: போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி தகவல்?
சுஷில் ஹரி பள்ளியின் தாளாளர் சிவசங்கர் பாபா கடந்த ஜூன் 16-ம் தேதி போலீசாரால் கைது செய்யப்பட்டார். இவர் மீது முன்னாள் மாணவிகள் பாலியல் புகார் அளித்த நிலையில் சிவசங்கர் பாபா டெல்லியில் கைது செய்யப்பட்டு, போக்ஸோ சட்டத்தின் கீழ் செங்கல்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
தற்போது இவர் மீது 3 போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட பின் சிவசங்கர் பாபாவுக்கு 2 முறை நெஞ்சுவலி வந்ததையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அதனை சுட்டிக் காட்டி அவருக்கு ஜாமீன் கோரி வருகிறது சிவசங்கர் பாபா தரப்பு ஜாமீன் மனு கொடுத்தது. இருந்தாலும், சிவசங்கர் பாபாவின் ஜாமீன் மனுக்கள் தொடர்ந்து தள்ளுபடி செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சிவசங்கர் பாபா பள்ளி மாணவிகளை வலுக்கட்டாயமாக அழைத்து வன்கொடுமை செய்ததாக விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது.
சுஷில் ஹரி பள்ளியில் 2011, 2012, 2013 படித்த மாணவர்களை வலுக்கட்டாயமாக வன்கொடுமை செய்ததாக தகவல் வெளியாகி உள்ளன.
சிவசங்கர் பாபாவுக்கு எதிராக 2 குற்றப்பத்திரிக்கை தயாராகி உள்ளதாக சிபிசிஐடி போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு நீதிமன்றத்தில் சிவசங்கர் பாபா மீது சில நாட்களில், 2-வது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. 3-வது போக்சோ வழக்கில் குற்றப்பத்திரிகை தயாரிக்கும் பணியில் சிபிசிஐடி போலீசார் ஈடுபட்டு வருகிறார்கள்.