பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு இனிப்பு வழங்கி வரவேற்பு கொடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
ஒன்றரை வருடங்களுக்கு பிறகு பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இனிப்புகள் வழங்கி வரவேற்றார். இது மாணவர்களையும், பெற்றோர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
கோயம்பேடு விஜயநகர் சந்திப்பில் ரூ.108 கோடியில் கட்டப்பட்டுள்ள, புதிய மேம்பாலத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இதனையடுத்து, ஒன்றரை ஆண்டுகளுக்கு பின் 1-8ம் வகுப்பு வரை உள்ள பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னை மடுவன்கரையில் உள்ள மாநகராட்சி பள்ளியில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வுகளை மேற்கொண்டார். அப்போது, பல மாதங்களுக்கு பின் பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இனிப்புகளை வழங்கி வரவேற்றார். மேலும், மாணவர்களுக்கு நோட்டு, புத்தகங்களை வழங்கினார். இதனால் பள்ளிக்கு வந்த மாணவர்கள் பெரு மகிழ்ச்சி அடைந்தனர்.
