பள்ளி மாணவர்களுக்குள் பயங்கர மோதல் - மாணவர் பரிதாப உயிரிழப்பு - அதிர்ச்சி சம்பவம்
கோவை ஆலந்துறை அருகே அரசுப் பள்ளி மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் மாணவன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
கோவை ஆலாந்துறை அரசு பள்ளியில் 11ம் வகுப்பு பள்ளி மாணவர்கள் 2 பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர்.
அப்போது, அப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவர் உட்பட 2 பேர் 3 பள்ளி மாணவர்களை கத்தியால் குத்தினர். இதில் காயம் அடைந்த 3 பேரும் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்கள்.
இந்நிலையில், மோதலில் காயமடைந்த பிளஸ்-1 மாணவர் நந்தகுமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இச்சம்பவத்தில் முன்னாள் பள்ளி மாணவர்கள் உட்பட சிறுவர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டு, சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்.