நடிகர் ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ் எப்போது? – இன்று மருத்துவக்குழு முடிவு
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ரஜினிகாந்தின் உடல்நிலை மிகவும் சீராக உள்ளதாக மருத்துவக்குழு தகவல் தெரிவித்துள்ளது.
கடந்த 28ம் தேதி நடிகர் ரஜினிகாந்திற்கு திடிரென தலை சுற்றல், மயக்கம் ஏற்பட்டது. இதனையடுத்து, அவரை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கழுத்து பகுதி வழியாக மூளை மற்றும் முகம், இதயத்திற்கு செல்லும் ரத்த நாளங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதன் பின்பு, ரஜினிக்கு ரத்த ஓட்டத்தை சீரமைப்பதற்கான அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. சிறப்பு மருத்துவ குழுவினர் தொடர்ந்து ரஜினிகாந்தின் உடல்நிலையை கண்காணித்து வருகிறார்கள். 3-வது நாளாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ரஜினிகாந்தின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவக் குழு தகவல் தெரிவித்திருக்கிறது.
ரஜினிக்கு எடுக்கப்பட்ட அனைத்து விதமான மருத்துவ பரிசோதனைகளிலும் அவரின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், ரஜினி நன்றாக பேசுகிறார், உணவு உட்கொள்கிறார் மற்றும் அன்றாட பழக்கங்களை செய்கிறார் என்ற தகவலை தெரிவித்திருக்கிறார்கள்.
இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ் எப்போது என்பது குறித்து இன்று முடிவு செய்யப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே, ரஜினிகாந்த் ஆண்டுக்கு ஒருமுறை செய்யப்படும் வழக்கமான பரிசோதனைக்காகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக அவரது மனைவி லதா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். இதன்பின், நடிகர் ரஜினிகாந்த் உடல் நலம் தேறி வருவதாகவும், ஒரு சில நாட்களில் வீடு திரும்வி விடுவார் என்றும் மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜேவிபியில் ரில்வின் சில்வா போன்று தமிழரசில் சுமந்திரன் : கட்சியைக் கட்டுப்படுத்தும் தலைமைகள் IBC Tamil
