அடுத்த 12 மணி நேரத்தில் புரட்டியெடுக்கப்போகும் ‘யாஸ் புயல்’ - வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை
மத்திய கிழக்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ‘யாஸ் புயல்’ அடுத்த 12 மணி நேரத்தில் வலுப்பெற்று அதி தீவிர புயலாக, மேற்கு வடமேற்கு திசையில் ஒரிசா மேற்கு வங்க கடற்கரையை நோக்கி நகர்ந்து நாளை பிற்பகல் பாரதீப் – சாகர் இடையே பாலசுருக்கு அருகே கரையைக் கடக்க இருக்கிறது என்று வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து வானிலை ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ள தகவல் வருமாறு -
நாளை முதல் 29ம் தேதி வரை கன்னியாகுமரி மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
வட தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு தரைக்காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும்.
இன்று முதல் வருகின்ற 29ம் தேதி வரை தென் மேற்கு அரபிக் கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும்.
இப்பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படும் என்பதால் மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்ல வேண்டாம்.
மத்திய கிழக்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ‘யாஸ் புயல்’ அடுத்த 12 மணி நேரத்தில் வலுப்பெற்று அதி தீவிர புயலாக மேற்கு வடமேற்கு திசையில் ஒடிசா மேற்கு வங்க கடற்கரையை நோக்கி நகர்ந்து நாளை பிற்பகல் பாரதீப் – சாகர் இடையே பாலசுருக்கு அருகே கரையைக் கடக்க கூடும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.