இன்று ஜெயலலிதா நினைவிடத்திற்கு செல்கிறார் சசிகலா - பலத்த போலீஸ் பாதுகாப்பு
இன்று ஜெயலலிதா நினைவிடத்திற்கு செல்ல உள்ளார் சசிகலா. சசிகலா சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து விடுதலை செய்யப்பட்டார்.
வெளியே வந்த சசிகலா தீவிர அரசியலில் ஈடுபடுவதாக தெரிவித்திருந்தார். இதனையடுத்து, அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால், சில நாட்களுக்கு பிறகு தான் அரசியலில் ஈடுபடப் போவதில்லை என்று அதிரடியாக அறிவித்தார்.
இந்நிலையில், சசிகலா சமீப நாட்களாக அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய ஆடியோக்கள் வெளியாகி பரபரப்பையும், சலசலப்பையும் ஏற்படுத்தின.
இந்நிலையில், இன்று காலை 10 மணி முதல் 12 மணிக்குள்ளாக மெரினா கடற்கரையில் அமைந்துள்ள மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, அண்ணா நினைவிடங்களுக்கு வி.கே.சசிகலா சென்று மலர்த் தூவி மரியாதை செலுத்த இருக்கிறார்.
