சென்னை மாநகராட்சியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் வெளியானது

politics election tamilnadu list
By Nandhini Feb 04, 2022 03:57 AM GMT
Report

மாநகராட்சி தேர்தலில் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் போட்டியிடும் 16 வார்டுகளுக்கான காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகி உள்ளன.

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 1064 மாநகராட்சி உறுப்பினர்கள், 3468 நகராட்சி உறுப்பினர்கள், 8288 பேரூராட்சி உறுப்பினர்கள் என மொத்தம் 12,820 பதவிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19-ஆம் தேதி ஒரே கட்டமாக நடக்க இருக்கிறது.

இதனையடுத்து, பிப்.22-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளன. இதற்கிடையில்,தொகுதி பங்கீடு,தேர்தல் பரப்புரை உள்ளிட்ட பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

அந்த வகையில், திமுக தலைமையிலான மதச்சார்ப்பற்ற முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ் கட்சியுடன் நடந்த பேச்சு வார்த்தை நேற்று நிறைவு பெற்றதையடுத்து, காங்கிரஸ் கட்சிக்கு 8 சதவீத இடங்கள் வழங்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில், 200 வார்டுகள் கொண்ட சென்னை மாநகராட்சி தேர்தலில் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் போட்டியிடும் 16 வார்டுகளுக்கான காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் மாநில தலைவர் கேஸ் அழகிரி வெளியிட்டிருக்கிறார். அதில்,9 இடங்களில் பெண் வேட்பாளர்கள் இடம்பெற்றிருக்கிறார்கள்.

இதோ அந்த பட்டியல் -   

சென்னை மாநகராட்சியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் வெளியானது | Tamilnadu Samugam Politics Election List