கோயிலும் அங்கேதான் இருக்கும்… - சாமியும் அங்கேதான் இருப்பார் ... அரசை குறை கூறலாமா – சீமான்
கோயிலும் அங்கேதான் இருக்கும். சமயம் அங்கே தான் இருப்பார். கொரோனா குறைந்த பின் வழிபாடுகள் நடத்தி கொள்ளலாமே என்று சீமான் தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. இதை தடுப்பதற்காக தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
இதனையடுத்து, தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டிருக்கிறது.
அதன்படி பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளன. ஆனால், வழிபாட்டுத்தலங்கள் வார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் இயங்க அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. இதற்காக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக வழிபாட்டுத் தளங்களை திறக்க அனுமதி வழங்குமாறு போராட்டத்தை நடத்தினார்கள்.
இந்நிலையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் நாகர்கோவிலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நாம் தமிழர் கட்சியில் ‘தமிழர் வீரக்கலை பாசறை’ என்ற புதிய பிரிவை தொடக்கி வைத்தார்.
அதன் பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய சீமான், வழிபட்ட தலங்களை திறந்தபோது மக்கள் கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றவில்லை. எனவே தான் கொரோனா பரவலை தடுக்கும் வண்ணம் தமிழக அரசு வழிபாட்டுத் தலங்களில் கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது. கோயிலும் அங்கேதான் இருக்கும். சமயம் அங்கே தான் இருப்பார். கொரோனா குறைந்த பின் வழிபாடுகள் நடத்தி கொள்ளலாமே. திடீரென கொரோனா அதிகரித்தால், அரசை குறை சொல்வதற்கா? என கேள்வி எழுப்பினார்.