காங்கிரஸ் எம்.பியாக பதவியேற்ற விஜய் வசந்த் ராகுல்காந்தியிடம் வாழ்த்து பெற்றார்!
கடந்த ஆண்டு 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வசந்தகுமார் கொரோனாவால் உயிரிழந்தார். இதனையடுத்து, அந்த தொகுதிக்கு தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற அன்றே இடைத்தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் விஜய் வசந்த் போட்டியிட்டார்.
கடந்த மே 2ம் தேதி நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் ராதாகிருஷ்ணனை விட அதிக வாக்குகள் பெற்று விஜய் வசந்த் வெற்றி பெற்றார். இந்நிலையில், இன்று காலை தொடங்கிய நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் காங்கிரஸ் எம்.பியாக விஜய் வசந்த் பதவியேற்றார்.
அவருக்கு சபாநாயகர் ஓம்பிர்லா பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதனையடுத்து விஜய் வசந்த் குமார், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை நேரில் சந்தித்து, தனது தந்தை எழுதிய Steps to success என்ற நூலை வழங்கி, அவரிடம் வாழ்த்துக்களை பெற்றுக்கொண்டார்.
