கோவை அரசு மருத்துவமனைக்கு 2 இலவச அமரர் ஊர்திகள் வழங்கிய வானதி சீனிவாசன்!

politics tamilnadu-samugam
By Nandhini May 20, 2021 07:52 AM GMT
Report

கோவை அரசு மருத்துவமனைக்கு 2 இலவச அமரர் ஊர்திகளை, கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரான வானதி சீனிவாசன் வழங்கியுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா 2ம் அலை அதிகமாக பரவி வருகிறது. இந்நிலையில், அந்தந்த தொகுதி எம்எல்ஏக்கள் கட்சி பாகுபாடின்றி களமிறங்கி மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார்.

இதனையடுத்து, எம்எல்ஏக்கள் அனைவரும் அந்தந்த தொகுதிகளில் கொரோனா நோய் தடுப்பு பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள். சென்னையை அடுத்து, கோவையில் அதிக பாதிப்பு உள்ளதால் அங்கு நிலைமை மோசமாகிக் கொண்டு வருகிறது.

இதனால், கோவையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரான வானதி சீனிவாசன் கொரோனா நோய் தடுப்புப் பணிகளை மும்முரமாக கவனித்து வருகிறார்.

பாஜக சார்பில் நடமாடும் நீராவி வாகனத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தது மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இதனையடுத்து அவர், கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு 2 இலவச அமரர் ஊர்தி வாகனங்களை வழங்கியிருக்கிறார். அதன் புகைப்படங்களை அவருடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.