பெரியார் சிலை அவமதிப்பு - குற்றவாளி இருவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
கோவையில் பெரியார் சிலை அவமதிப்பு செய்த நபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. கோவையை அடுத்த வெள்ளலூரில் தந்தை பெரியாரின் உருவ சிலை ஒன்று இருக்கிறது.
இந்த சிலை மீது கடந்த 8-ஆம் தேதி இரவு மர்ம நபர்கள் செருப்பு மாலை அணிந்து, தலைப்பகுதியில் குங்குமத்தை தூவி அவமரியாதை செய்தனர். இது குறித்து, அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கேமரா பதிவுகளை ஆய்வு செய்த போலீசார், இருவர் பெரியார் சிலைக்கு செருப்பு மாலை அணிவித்தது தெரியவந்தது.
இதன் பின், போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில், பெரியார் சிலை அவமதிப்பு செய்த இந்து முன்னணியைச் சேர்ந்த கார்த்தி மற்றும் மோகன்ராஜா இருவரை போலீசார் கைது செய்தார்கள்.
தற்போது இவர்கள் இருவரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையிலடைக்க கோவை காவல் ஆணையர் பிரதீப் குமார் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.