தமிழக ஆளுநரை இன்று சந்திக்கிறார் எடப்பாடி பழனிசாமி
தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று காலை 11 மணிக்கு சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்திக்க இருக்கிறார். அப்போது, தமிழகத்தின் பல்வேறு முக்கிய நிகழ்வுகள் தொடர்பான கோரிக்கை மனுவை வழங்க இருக்கிறார்.
அதில் குறிப்பாக, ஊரக உள்ளாட்சி தேர்தல் முறைகேடு குறித்து புகார் மனு அளிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆளுநரை சந்தித்தார்.
இந்நிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று சந்திக்க உள்ளார். இன்று காலை 11மணிக்கு அதிமுக எம்எல்ஏக்களுடன் சென்று ஈபிஎஸ் சந்திக்கவுள்ளதாக தெரிகிறது. ஆர்.என்.ரவி தமிழ்நாட்டின் ஆளுநராக பதவியேற்ற பிறகு முதன்முறையாக இந்த சந்திப்பு நிகழ உள்ளது. அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சோதனைக்குள்ளாகி வரும் ஆளுநருடனான சந்திப்பு என்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. அத்துடன் மாநிலம் சார்ந்த சில முக்கிய கோரிக்கைகளும் அதிமுக தரப்பில் தெரிவிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.