மீண்டும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதி! ரசிகர்கள் அதிர்ச்சி
தேமுதிக தலைவர் விஜயகாந்த்திற்கு சமீபத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டது. அதற்காக சிகிச்சை பெற்று குணமடைந்தார். இந்நிலையில், தற்போது அவர் மீண்டும் சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. ஆனால் என்ன காரணத்திற்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார் என்ற தகவல் வெளியாகவில்லை.
அதே நேரத்தில் விஜயகாந்தின் உடல்நிலை சீராக உள்ளதாகவும், அவருக்கு எந்த ஆபத்தும் இல்லை என்றும் கூறப்படுகிறது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பது அவரது கட்சித் தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.