ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற 21 வயது பெண்!
தென்காசி மாவட்டம் கடையம் ஒன்றியம் வெங்கட்டாம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் போட்டியிட்ட 21 வயது இளம்பெண் சாருலதா என்பவர் ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
தமிழக முழுவதும் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலானது அக்.6 மற்றும் அக்.9 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெற்று முடிந்தது. இந்நிலையில், இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. தேர்தல் முடிவுகளின்படி, பெரும்பாலான இடங்களில் திமுக முன்னிலை வகித்து வருகிறது.
இந்நிலையில், தென்காசி மாவட்டம் கடையம் ஒன்றியம் வெங்கட்டாம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் போட்டியிட்ட 21 வயது இளம்பெண் சாருலதா என்பவர் ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். மேலும், அவர் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் பெற்றுக் கொண்டார்.