முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துகுவிப்பு வழக்கை விசாரித்த முன்னாள் எஸ்.பி உயிரிழந்தார்
மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில், விசாரணை அதிகாரியாக இருந்த நல்லம நாயுடு (83) வயது மூப்பின் காரணமாக உயிரிழந்துள்ளார்.
சென்னை பெரவள்ளூரில் வசித்து வந்த அவர், 1961ம் ஆண்டு காவல் உதவி ஆய்வாளராக பணியில் சேர்ந்தார். பிறகு, லஞ்ச ஒழிப்புத்துறையில் காவல் கண்காணிப்பாளராக பணி புரிந்தார். 2 முறை குடியரசுத் தலைவரிடம் விருது பெற்றிருக்கிறார் நல்லம நாயுடு. மேலும், லஞ்ச ஒழிப்புத்துறையில் திறம்பட செயல்பட்டதற்காக ஆளுநரிடமும் விருது பெற்றவர்.
1997 முதல் 2015ம் ஆண்டு வரை, மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் முதன்மை விசாரணை அதிகாரியாக நல்லம நாயுடு பணியாற்றினார். மேலும், ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் சிபிஐ விசாரணை அதிகாரியாகவும் செயலாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.