வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.268 உயர்வு - ஷாக் நியூஸ்
tamilnadu-samugam-cylinder-price-increase
By Nandhini
ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டு வருகின்றது. அதனையடுத்து, சமையல் எரிவாயு சிலிண்டர் விலை கடந்த மாதம் 15 ரூபாய் உயர்த்தப்பட்டது.
இந்நிலையில், சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் விலை ரூ.268 அதிகரித்து ரூ.2,133 ஆக நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.
இதனால், கடைக்காரர்கள் கடும் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள். வீடுகளில் பயன்படுத்தும் கேஸ் சிலிண்டருக்கான விலை எந்த மாற்றமுமின்றி ரூ.915.50 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.