நடிகர் விஷாலுக்கு எதிரான வழக்கு - லைகா நிறுவனத்துக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்து உயர்நீதிமன்றம் அதிரடி!

tamilnadu-samugam-cinema
By Nandhini Aug 19, 2021 04:06 AM GMT
Report

நடிகர் விஷாலுக்கு எதிராக லைகா நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில், லைகா நிறுவனத்துக்கு ரூ.5 லட்ச ரூபாய் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம், வழக்கை தள்ளுபடி செய்துள்ளது.

கடந்த 2016ம் ஆண்டு நடிகர் விஷால் மருது திரைப்பட தயாரிப்புக்காக கோபுரம் பிலிம்ஸ் அன்புசெழியனிடம் 21 கோடியே 29 லட்சம் கடன் பெற்றார். அந்த தொகையை நடிகர் விஷாலால் திருப்பி செலுத்த முடியவில்லை.

இதனால், தயாரிப்பு நிறுவனமான லைகாவை அணுகி தன் கடனை அன்பு செழியனுக்கு செட்டில் செய்யுமாறு கோரிக்கை விடுத்தார். இதனையடுத்து, லைகா நிறுவனமும் விஷாலின் கடனை அடைத்தது. இதன் பிறகு, 2019ம் ஆண்டு செப்டம்பர் 21ம் தேதி லைகா நிறுவனம் நடிகர் விஷாலிடம் ஒரு ஒப்பந்தம் செய்தது.

அந்த ஒப்பந்தத்தில், லைகா நிறுவனம் தன்னுடைய கடனை செலுத்திய ரூ.21.29 கோடியை 30 சதவீத வட்டியுடன் தவணை முறையில் செலுத்துவதாக ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டது. ‘துப்பறிவாளன் 2’ திரைப்படம் வெளியான பின் 2020 மார்ச் சமயத்தில் 7 கோடியும், மீதத் தொகையை 2020 டிசம்பருக்குள் செலுத்திவிடுவதாக நடிகர் விஷால் தெரிவித்தார்.

இந்நிலையில், பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் விஷால் தரப்பில் பதில் இல்லை. மொத்தமாக 30 கோடியே 5 லட்சத்து 68 ஆயிரத்து 137 ரூபாயை வழங்க விஷாலுக்கு உத்தரவிட கோரியும் லைகா சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், ‘துப்பறிவாளன் 2’ படம் வெளியாகும் சமயத்தில் விஷால் வாங்கிய கடன் தொகையை திருப்பி வாங்குவதாக லைகா ஒப்புக்கொண்டுவிட்டு, தற்போது முழு தொகையையும் கோரி படத்தின் வெளியீட்டிற்கு முன்பே வழக்கு தொடர்ந்திருப்பது பொருந்தத்தக்கது அல்ல என்று தெரித்த அவர், லைகா நிறுவனத்துக்கு ரூ.5 லட்ச ரூபாய் அபராதம் விதித்து, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

நடிகர் விஷாலுக்கு எதிரான வழக்கு - லைகா நிறுவனத்துக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்து உயர்நீதிமன்றம் அதிரடி! | Tamilnadu Samugam Cinema