திருமண நிகழ்ச்சியில் மணமக்களுக்கு பெட்ரோலை பரிசாக கொடுத்த நடிகர் மயில்சாமி

tamilnadu-samugam-cinema viral news
By Nandhini Aug 16, 2021 10:40 AM GMT
Report

தமிழ் திரையுலகில் பல்வேறு படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் மயில்சாமி.

இவர், அண்மையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது, மணமக்களுக்கு 2 கேன் பெட்ரோலை பரிசாக கொடுத்தார். இது திருமணத்துக்கு வந்திருந்தவர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது.

இது குறித்து நடிகர் மயில்சாமி கூறுகையில், “பெட்ரோல் விலை உயர்வை மத்திய அரசு கண்டுகொள்வதில்லை. அவர்களுக்கு மக்களின் கோரிக்கையை தெரியப்படுத்துவதற்காகத் தான் இப்படி செய்தேன். தமிழ்நாடு அரசு பெட்ரோல் விலையில் ரூ.3 குறைத்துள்ளதை வரவேற்கிறேன்” என்றார்.

தற்போது, திருமண நிகழ்ச்சியில் மணமக்களக்கு பெட்ரோலை பரிசாக கொடுத்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. 

திருமண நிகழ்ச்சியில் மணமக்களுக்கு பெட்ரோலை பரிசாக கொடுத்த நடிகர் மயில்சாமி | Tamilnadu Samugam Cinema