பயங்கர கார் விபத்து - நடிகை யாஷிகா படுகாயம் - தோழி உயிரிழப்பு!

பிரபல நடிகையும், பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மூலமாக பிரபலமடைந்தவர் நடிகை யாஷிகா. சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக வலம் வரும் நடிகை யாஷிகா ஆனந்த், மாடலிங் துறையிலும் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

நேற்று யாஷிகா ஆனந்த் தன்னுடைய தோழிகளுடன் காரில் சென்றுள்ளார். அப்போது யாஷிகா ஆனந்த் சென்று கொண்டிருந்த கார் மாமல்லபுரம் அருகே நள்ளிரவில் திடீரென கட்டுப்பாட்டை இழந்தது. இதனையடுத்து வேகமாக வந்த கார் தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் நடிகை யாஷிகா படுகாயம் அடைந்தார். நடிகை யாஷிகாவும், அவருடைய இரண்டு நண்பர்கள் உடனடியாக அருகேயுள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது.

இந்த பயங்கர விபத்தில் யாஷிகாவின் தோழியான வள்ளிச்செட்டி பவனி என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்ந்து யாஷிகாவுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நடிகை யாஷிகா ஆனந்த் கார் விபத்து தமிழ் திரையுலகிலும், ரசிகர்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்