நடிகை நயன்தாராவின் தந்தை திடீரென மருத்துவமனையில் அனுமதி! தீவிர சிகிச்சை!

tamilnadu-samugam-cinema
By Nandhini Jul 09, 2021 07:53 AM GMT
Report

நடிகை நயன்தாராவின் தந்தை குரியன் கொடியட்டு உடல்நலக்குறைவால் கேரளாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த ஓணம் பண்டிகைக்கு நயன்தாரா, காதலர் விக்னேஷ் சிவன் உடன் கொச்சி சென்ற போது நயன்தாராவின் அம்மாவுடன் விக்னேஷ் சிவன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூவலைத்தளத்தில் வைரலாக பரவியது. அப்போதும் நயன்தாரா அப்பாவின் புகைப்படங்களோ, செய்திகளோ வெளியாகவில்லை.

இந்நிலையில், தற்போது நடிகை நயன்தாராவின் தந்தைக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதால் நடிகை நயன்தாரா கேரளாவிற்கு விரைந்து சென்றுள்ளார். 

நடிகை நயன்தாராவின் தந்தை திடீரென மருத்துவமனையில் அனுமதி! தீவிர சிகிச்சை! | Tamilnadu Samugam Cinema