இயக்குநர் சங்கருக்கு எதிராக லைகா தொடுத்த வழக்கு – தள்ளுபடி செய்து அதிரடி காட்டிய உயர்நீதிமன்றம்!

tamilnadu-samugam-cinema
By Nandhini Jul 07, 2021 09:34 AM GMT
Report

இயக்குநர் சங்கருக்கு எதிராக லைக்கா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மற்றொரு வழக்கையும் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. நடிகர் கமல் நடிப்பில், இயக்குநர் சங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படம் தயாராகி வருகிறது.

இந்நிலையில், இந்தியன் 2 படத்தை முடித்து கொடுக்காமல் வேறு எந்த படத்தையும் சங்கர் இயக்கக்கூடாது என்றும், அவருக்கு தடை விதிக்க கோரியும் லைகா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் சங்கர் தரப்பு விளக்கத்தை கேட்காமல், தடை உத்தரவு பிறப்பிக்க முடியாது என தனி நீதிபதி மறுத்தார்.

இதை எதிர்த்து லைகா தரப்பில் தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் முறையிடப்பட்டது. இந்த வழக்கானது இன்று மீண்டும் தலைமை நீதிபதி முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கு செல்லதக்கதல்ல என்று கூறி மீண்டும் லைகா சார்பில் தாக்கல் செய்யபட்ட மற்றொரு வழக்கையும் தலைமை நீதிபதி அமர்வு தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.