‘ஜெயலலிதா மேடம் கூட இல்லை... PSBB ஸ்கூல செஞ்சிருவாங்க போல” – பிரபல நடிகர் டுவிட்டால் பரபரப்பு!

tamilnadu-samugam-cinema
By Nandhini May 25, 2021 11:46 AM GMT
Report

‘PSBB ஸ்கூல செஞ்சிருவாங்க போல” என்று பிரபல நடிகர் வெளியிட்டுள்ள டுவிட் கருத்தால் தற்போது சமூகவலைத்தளங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

சென்னை கேகே நகரில் பத்ம சேஷாத்ரி பால பவன் (PSBB) பள்ளியில் இயங்கி வருகிறது. இந்த பணியில் பணிபுரிந்த ஆசிரியர் ராஜகோபாலன் கடந்த பல ஆண்டுகளாக மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்து வருவதாக புகார் எழுந்தது.

இதனையடுத்து, ராஜகோபாலன் போலீசார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தற்போது இந்த விவகாரம் தான் தமிழகத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வளவு ஆண்டுகளாக நடந்துகொண்டிருக்கும் இந்த குற்றச்செயல்களை ஏன் நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை என்றும், தமிழ்நாட்டிலுள்ள பள்ளிகளில் போக்சோ சட்ட விதிமுறைகள் காற்றில் பறந்துவிட்டனவா என்றும் சமூகவலைத்தளங்களில் கேள்வி கேட்கப்பட்டு வருகிறது.

பலரும் பள்ளியின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கண்டனங்களுடன் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், இதுதொடர்பாக பிரபல நடிகர் நிதின்சத்யா டுவிட்டரில் ஒரு பதிவை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில், “இந்தவாட்டி இந்த ஸ்கூல்ல செஞ்சிருவாங்க போல. போதிய ஆதாரங்கள் இருக்கின்றன. இந்த முறை காப்பாற்ற ஜெயலலிதா மேடம் கூட இல்லை” என்று பதிவிட்டுள்ளார்.