தம்பி உயிர்விட்ட அதே இடத்தில் தூக்கில் தொங்கிய பாசக்கார அக்கா - சோகச் சம்பவம்

borther-sister-death Tragic incident
By Nandhini Nov 29, 2021 04:36 AM GMT
Report

தம்பி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதால் பாசக்கார அக்கா, தம்பி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட இடத்திலேயே தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம், ஹாவேரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சந்துரு சலவாடி. இவர் காவேரி தொகுதி பாஜக எம்எல்ஏ நேரு ஓலேகரின் உறவினர். சந்துரு சலவாடிக்கு பாக்கியலட்சுமி என்ற 18 வயது மகளும், நாகராஜ் என்கிற 15 வயது மகளும் உள்ளனர். தம்பி நாகராஜ் மீது அளவு கடந்த பாசம் வைத்து வைத்தார் பாக்கியலட்சுமி. ஆனாலும் தம்பி படிப்பில் சரியாக ஆர்வம் காட்டாமல் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில், நாகராஜை ஒழுங்காக படிக்கச் சொல்லி, சந்துரு சலவாடி தொடர்ந்து அவரை சத்தம் போட்டுக் கொண்டிருந்தார். இதனால், மனசு உடைந்து போன நாகராஜ், வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இத்தகவைல அறிந்த, பேடகி டவுன் போலீசார் நாகராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தம்பி தற்கொலை செய்து கொண்டதை தாங்கிக் கொள்ள முடியாமல் பாக்யலட்சுமி கதறி அழுது கொண்டிருந்தார். அவரை உறவினர்கள் சமாதானப்படுத்த முயற்சி செய்தனர்.

ஆனாலும், சமாதானம் ஆகாமல் தொடர்ந்து அழுது கொண்டே இருந்தாள் பாக்கியலட்சுமி. நாகராஜ் பிரேத பரிசோதனை தொடர்பாக உறவினர்கள் வெளியே சென்ற நேரத்தில், சில உறவினர்கள் வீட்டிற்கு முன்பு நின்று கொண்டிருந்தனர்.

அந்த நேரத்தில் தம்பி தூக்கிட்டு தொங்கிய அதே இடத்தில் பாக்கியலட்சுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் பாக்யலட்சுமியின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தம்பி இறந்த துக்கம் தாங்காமல் அக்காவும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. 

தம்பி உயிர்விட்ட அதே இடத்தில் தூக்கில் தொங்கிய பாசக்கார அக்கா - சோகச் சம்பவம் | Tamilnadu Samugam Borther Sister Death