சாலையில் கால்நடைகள் சுற்றி திரிந்தால் ரூ.10,000 அபராதம் – அதிரடி அறிவிப்பு!

tamilnadu-samugam
By Nandhini Nov 18, 2021 06:57 AM GMT
Report

சாலையில் கால்நடைகள் சுற்றி திரிந்தால் ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும் என்று திருச்சி மாநகராட்சி அதிரடியாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

திருச்சி மாநகராட்சியில் உள்ள தெரு மற்றும் சாலையில் கால்நடைகள் சுற்றித் திரிந்தால் உரிமையாளருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இது குறித்து திருச்சி மாநகராட்சி ஆணையர் வெளியிட அறிக்கையில் கூறியிருப்பதாவது -

சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளை பிடித்து செல்வதுடன், உரிமையாளருக்கு முதல்கட்டமாக ரூ.10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். 3 நாட்களுக்குள் உரிமையாளர்கள் கால்நடைகளை அபராதம் செலுத்திவிட்டு பெற்றுக்கொள்ளலாம்.

அவ்வாறு 3 நாட்களுக்குள் பெற்று கொள்ளாவிட்டால் மாநகராட்சி அருகிலுள்ள கால்நடை சந்தையில் கால்நடைகள் விற்கப்படும். கால்நடைகளை விற்று பெறப்படும் பணம் மாநகராட்சி கருவூலத்தில் செலுத்தப்படும்.

இவ்வாறு திருச்சி மாநகராட்சி ஆணையர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.\

சாலையில் கால்நடைகள் சுற்றி திரிந்தால் ரூ.10,000 அபராதம் – அதிரடி அறிவிப்பு! | Tamilnadu Samugam