“மதிப்புக்குரிய திருமாவளவன் அவர்களுக்கு” – நடிகர் சூர்யா எழுதிய கடிதம்!

tamilnadu-samugam
By Nandhini Nov 15, 2021 08:52 AM GMT
Report

ஜெய்பீம் திரைப்படத்திற்கு பாராட்டு தெரிவித்த விசிக தலைவர் திருமாவளவனுக்கு நடிகர் சூர்யா நன்றி தெரிவித்து கடிதம் எழுதி இருக்கிறார்.

இது குறித்து நடிகர் சூர்யா நன்றி தெரிவித்து, அக்கடிதத்தில் கூறியிருப்பதாவது -

“மதிப்புக்குரிய திரு.தொல்.திருமாவளவன் அவர்களுக்கு வணக்கம். தங்கள் வாழ்த்தும் பாராட்டும் மன நிறைவை அளித்தன.மக்கள்தொகையில் மிகச் சிறுபான்மையினராக பழங்குடிகள் நலன் சார்ந்து தாங்களும் தங்கள் இயக்கமும் தொடர்ந்து செயல்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது.

தாங்கள் குறிப்பிட்டதைப் போல மாண்புமிகு தங்கள் தமிழக முதல்வர் பழங்குடியின மக்களின் நீண்டகால பிரச்சனைகளுக்கு தீர்வு காண மக்களின் உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளது அனைவருக்கும் மிகுந்த மனநிறைவை தந்துள்ளது. பாதிக்கப்படும் மக்களின் பிரச்சனைகளை அனைவரிடமும் கொண்டு சேர்ப்பது மட்டுமே ஜெய் பீம் திரைப்படத்தின் நோக்கம்.

கவன படுத்துவது மட்டுமே கலைப்படைப்பின் மூலம் சாத்தியம், உண்மையான சமூக மாற்றங்களை அரசும், அரசியல் இயக்கங்களும் மட்டுமே உருவாக்க முடியும். ஊக்கமூட்டும் தங்கள் வார்த்தைகளுக்கு மிக்க நன்றி.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.