இருளர் மற்றும் பழங்குடியினருக்கு உணவு பரிமாறிய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

tamilnadu-samugam
By Nandhini Nov 12, 2021 12:30 PM GMT
Report

மாம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாமில் தங்கியுள்ள இருளர் மற்றும் பழங்குடியினர் இன மக்களுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உணவு பரிமாறியுள்ளார்.

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வந்தது. இந்நிலையில், பல மாவட்டங்களில் சாலைகளில் மழைநீர் தேங்கியது. வீடுகளிலும் மழை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து நிவாரண பொருட்களை வழங்கி வருகிறார்.

இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் மழை வெள்ள பாதிப்பை ஆய்வு செய்த தமிழக முதலமைச்சர், மாம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாமில் தங்கியுள்ள இருளர் மற்றும் பழங்குடியினர் இன மக்களுக்கு உணவு பரிமாறியுள்ளார்.