சாலையோர தேநீர் கடையில் அமர்ந்து தேநீர் அருந்திய தமிழக முதலமைச்சர் - செல்பி எடுத்துக் கொண்ட பொதுமக்கள்
சாலையோரத்தில் இருந்த தேநீர் கடையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் ஆகியோர் அந்த கடையிலேயே அமர்ந்து தேநீர் வாங்கி அருந்தியுள்ளனர்.
தமிழகத்தில் கடந்த தினங்களாக கனமழை தொடர்ந்து பெய்தது. இதனால், சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் சாலைகளில் மழைநீர் வெள்ளமாக ஓடியது. வீடுகளுக்குள் மழைநீர் புகுந்து, மக்களின் இயல்புவாழ்க்கை பெரும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை மாம்பாக்கம் பகுதியில், மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குவதற்காக சென்றார். அப்போது சாலையோரம் இருந்த தேநீர் கடையில், முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் ஆகியோர் அந்த கடையிலேயே தேநீர் வாங்கி அருந்தினார்கள்.
அப்போது, அங்கிருந்தவர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மழை வெள்ள பாதிப்பு குறித்து கேட்டறிந்தார். மேலும், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் தமிழக முதலமைச்சருடன் இணைந்து மகிழ்ச்சியோடு செல்பி எடுத்துக் கொண்டனர்.