ஆசிரியர் கி.வீரமணி மற்றும் அவரது மனைவி மருத்துவமனையில் திடீர் அனுமதி
திராவிட கழகத் தலைவரான கி.வீரமணி மற்றும் அவரது மனைவி மேனகாவுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா தொற்று உலகையே ஆட்டிப் படைத்து வருகிறது.
இந்நிலையில் அரசியல் பிரபலங்கள் முதல் பாமர மக்கள் வரை பலரும் இந்த கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், திராவிட கழகத் தலைவரான கி.வீரமணி மற்றும் அவரது மனைவி மேனகாவுக்கு கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனையடுத்து, சென்னையில் தனியார் மருத்துவமனையில் திராவிடர் கழகத் தலைவர் வீரமணியும் அவரது மனைவி மேனகாவும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிறிய அளவில் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், சில நாட்கள் இருவரும் வீடு திரும்புவார் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.