முதல் தலைமுறையாக மலசர் பழங்குடி மாணவி நீட் தேர்வில் தேர்ச்சி

tamilnadu-samugam
By Nandhini Nov 03, 2021 08:14 AM GMT
Report

நீட் தேர்வில், கோவையில் முதல் தலைமுறையாக மலசர் பழங்குடி மாணவி தேர்ச்சி பெற்றிருக்கிறார். இந்தியா முழுவதும் செப்.12ம் தேதி மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு நடக்கிறது.

இந்நிலையில், இத்தேர்வினை தமிழகத்தில் 1.10 லட்சம் மாணவர்கள் எழுதி இருக்கிறார்கள். இந்த நீட் தேர்வுக்கான முடிவுகள் நேற்று முன்தினம் வெளியாகி இருக்கிறது.

இந்த நீட் தேர்வில், கோவையில் முதல் தலைமுறையாக மலசர் பழங்குடி மாணவி தேர்ச்சி பெற்றுள்ளார். அந்த மாணவியின் பெயர் சங்கவி (20). மதுக்கரை அருகே உள்ள எம்.நஞ்சப்பனூர் என்ற மலைக்கிராமத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தை முனியப்பன் இறந்து விட்டார். தாயார் வசந்தாமணி கண் பார்வை குறைபாடுள்ளவர். நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவி சங்கவி, தன்னுடைய சாதி சான்றிதழ் வாங்க கடுமையாக போராடி வெற்றி பெற்றிருக்கிறார்.

இந்நிலையில், நீட் தேர்வில் தேர்ச்சி பெறவும் கடுமையாக போராடி வெற்றி பெற்றுள்ளார். இது குறித்து மாணவி கூறுகையில், ‘என்னுடைய வெற்றி என் கிராமத்தின் வெற்றியென மாணவி பெருமிதம்’ என தெரிவித்துள்ளார்.

மாணவி சங்கவி, நீட் தேர்வில் இவர் 720 மதிப்பெண்களுக்கு 202 மதிப்பெண்கள் பெற்றிருக்கிறார். பழங்குடியின மாணவியான இவர் 108 மதிப்பெண்கள் பெற்றிருந்தாலே அரசு மருத்துவக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிப்புக்கு தகுதி பெற்று விடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் தலைமுறையாக மலசர் பழங்குடி மாணவி நீட் தேர்வில் தேர்ச்சி | Tamilnadu Samugam