பட்டினிப்பட்டியலில் சிறிய நாடுகளை விட பின்தங்கியுள்ளோம் – பிறந்தநாளை முன்னிட்டு கமல்ஹாசன் ட்வீட்
என் பிறந்தநாளையொட்டி ஏழைகளுக்கு 7 லட்சம் உணவுப்பொட்டலங்களை வழங்கி வருகிறார்கள். மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசனுக்கு வரும் 7-ம் தேதி பிறந்த நாளை கொண்டாட உள்ளார்.
இந்நிலையில், அவரது பிறந்தநாளை சிறப்பிக்கும் வண்ணம் மக்கள் நீதி மய்யம் கட்சியை சேர்த்தவர்கள், 7 லட்சம் ஏழைகளுக்கு உணவுப்பொட்டலங்களை வழங்க இருக்கிறார்கள்.
இதுகுறித்து, கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில், பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், ‘என் பிறந்தநாளையொட்டி ஏழைகளுக்கு 7 லட்சம் உணவுப்பொட்டலங்களை வழங்குகிறார்கள் மநீமவினர்.
இது பிறந்தநாள் கொண்டாட்டம் மட்டுமல்ல. பட்டினிப்பட்டியலில் சிறிய நாடுகளை விடவும் பின்தங்கியிருக்கிறோம். பசித்த வயிறுகள் அதிகரித்துள்ளன. இந்தக் கவலை நமை ஆள்வோர்க்கு இருக்கிறதாவெனும் நினைவூட்டலும் கூட.’ என பதிவிட்டுள்ளார்.
என் பிறந்தநாளையொட்டி ஏழைகளுக்கு 7 லட்சம் உணவுப்பொட்டலங்களை வழங்குகிறார்கள் மநீமவினர்.இது பிறந்தநாள் கொண்டாட்டம் மட்டுமல்ல. பட்டினிப்பட்டியலில் சிறிய நாடுகளை விடவும் பின்தங்கியிருக்கிறோம்.பசித்தவயிறுகள் அதிகரித்துள்ளன.இந்தக்கவலை நமை ஆள்வோர்க்கு இருக்கிறதாவெனும் நினைவூட்டலும் கூட. pic.twitter.com/iahw32FnQL
— Kamal Haasan (@ikamalhaasan) November 1, 2021