கோவிலுக்குள் அன்னதான உணவு மறுக்கப்பட்ட பெண்ணுடன் உணவருந்திய அமைச்சர் - வைரல் புகைப்படம்

tamilnadu-samugam
By Nandhini Oct 30, 2021 03:16 AM GMT
Report

கோவிலில் உணவருந்த அனுமதி மறுக்கப்பட்டதாக பேட்டியளித்த பெண்ணுடம் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு உணவருந்தினார்.

ஸ்தலசயன பெருமாள் திருக்கோயிலில் தமிழக அரசின் அன்னதான திட்டத்தின் கீழ் தினமும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகின்றது. கடந்த சில நாட்களுக்கு முன்பு நரிக்குறவ சமுதாயத்தை சேர்ந்த பெண் உள்பட சிலர் கோயிலில் வழங்கப்பட்ட அன்னதானத்தை சாப்பிடுவதற்கு சென்றனர். அப்போது, அவர்கள் உணவருந்த அனுமதி அளிக்கப்படவில்லை.

எங்களுக்கு உணவு வழங்கவில்லை என்று கூறி திருப்பி அனுப்பிவிட்டதாக நரிக்குறவ பெண் ஒருவர் குற்றச்சாட்டினார். இது குறித்து வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.

குற்றச்சாட்டிய நரிக்குறவ பெண் உள்பட பொதுமக்களுடன் அமர்ந்து அன்னதான திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மதிய உணவை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்களுடன் அமர்ந்து சாப்பிட்டார். பின்னர் நரிக்குறவ மக்கள் உள்பட 200-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு கோயில் வளாகத்தில் வேட்டி, சேலைகளை வழங்கினார்.

கோவிலுக்குள் அன்னதான உணவு மறுக்கப்பட்ட பெண்ணுடன் உணவருந்திய அமைச்சர் - வைரல் புகைப்படம் | Tamilnadu Samugam