‘சார்... பள்ளிகள் எப்போது திறக்கும்...?’ : கடிதம் எழுதிய மாணவிக்கு போன் செய்து உரையாடிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

tamilnadu-samugam
By Nandhini Oct 16, 2021 04:37 AM GMT
Report

பள்ளிகள் திறப்பு குறித்து கடிதம் எழுதிய கிருஷ்ணகிரியைச் சேர்ந்த பள்ளி மாணவியிடம் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் போன் செய்து மாணவியிடம் பேசியுள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரைச் சேர்ந்த ரவிராஜன். இவரது மகள்கள் பிரஜ்னா மற்றும் ரேஷிதா. இருவரும், 9ம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என முதலமைச்சருக்கு கடிதம் எழுதினார்கள்.

இந்நிலையில், கடிதத்தை படித்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், போன் செய்து மாணவி பிரஜ்னாவை அழைத்து பேசினார்.

இது குறித்து மாணவி பிரஜ்னா பேசுகையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சாருடன் பேசியது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. போனில் பேசியது நெகிழ்ச்சியான தருணம் என்று கூறினார். 

‘சார்... பள்ளிகள் எப்போது திறக்கும்...?’ : கடிதம் எழுதிய மாணவிக்கு போன் செய்து உரையாடிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் | Tamilnadu Samugam