வரலாற்றுச் சுவடு - மன்னர் வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு தினம் இன்று

tamilnadu-samugam
By Nandhini Oct 16, 2021 03:58 AM GMT
Report

வரலாற்றுச் சுவடு - மன்னர் வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு தினம் இன்று 

ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடிய பாளையக்கார மன்னர் வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகின்றது.

பாஞ்சாலங்குறிச்சியில் 1760ம் ஆண்டு ஜனவரி 3ம் தேதி வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தார். இவர் ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடிய மன்னராக திகழ்ந்தார்.

பிரிட்டிஷ் அரசு தன்னுடைய ஆட்சியை நிலைநாட்டுவதற்காக, பாளையக்காரர்களிடமிருந்து வரி வசூலிக்க முடிவு செய்திருந்தது. அப்போது, வரி வசூலிக்கும் ஆங்கிலேயத் தளபதியால் கட்டபொம்மனிடமிருந்து வரி வசூலிக்க முடியவில்லை. ஆங்கிலேயத் தளபதி ஆலன் 1797ம் ஆண்டு கட்டபொம்மனுடன் போரிட பெரும்படையுடன் வந்தார்.

உங்களுக்கு வரிசெலுத்தும் அவசியம் எங்களுக்கு கிடையாது. நாங்கள் சுதந்திர மன்னர்கள் என்று கட்டபொம்மன் துணிச்சலாக அவர்களிடம் பேசினார். இவரது வீரத்தைப் பார்த்து, சுற்றியுள்ள அனைத்துப் பாளையக்காரர்களும் ஆங்கிலேயரை எதிர்த்து நின்றார்கள். இறுதியாக கயத்தாறு என்ற இடத்தில் அவர் மீது விசாரணை நடத்தப்பட்டது.

அப்போதும்கூட, என் தாய் மண்ணைக் காக்க உங்களுக்கு எதிராகப் போராடினேன் என கம்பீரத்துடன் முழங்கினார். இவர், 1799ஆம் ஆண்டு கயத்தாறில் தனது 39 வது வயதில் அக்டோபர் 16 ஆம் தேதி ஆங்கிலேயர்களால் தூக்கிலிடப்பட்டார். இவரது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

வரலாற்றுச் சுவடு - மன்னர் வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு தினம் இன்று | Tamilnadu Samugam