அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் மருத்துவமனையில் திடீர் அனுமதி
tamilnadu-samugam
By Nandhini
தமிழக அமைச்சர் எம்.ஆர். கே பன்னீர்செல்வம் திடீர் உடல்நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்துக்கு நேற்று மாலை திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, அவர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் அவருக்கு இதய அடைப்புக்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதய பிரச்சனை காரணத்தினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அமைச்சருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அவரது உடல்நிலை தற்போது சீராக உள்ளதாக மருத்துவமனை வட்டாரம் தெரிவித்துள்ளன.
