வெற்றியின் விளிம்பில் திமுக - 9 மாவட்ட ஊராட்சி கவுன்சில்களையும் கைப்பற்றுகிறது – அதிமுகவுக்கு கடும் பின்னடைவு
தமிழகத்தில் 9 மாவட்ட ஊரக ஊராட்சி கவுன்சில்களையும் திமுக கூட்டணி கைப்பற்றும் சூழ்நிலை நிலவி வருகிறது.
தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் மாவட்ட கவுன்சிலர் மற்றும் ஒன்றிய கவுன்சிலர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு 2 கட்டங்களாக சமீபத்தில் நடந்தது.
இதன் வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. உள்ளாட்சி தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் திமுக கூட்டணி தொடர்ந்து முன்னிலையில் இருக்கிறது. இதில் சில இடங்களில் வெற்றி பெற்றவர்களை அறிவித்து வருகிறது. இந்நிலையில், 9 மாவட்ட ஊராட்சி கவுன்சில்களையும் திமுக கூட்டணி கைப்பற்றும் சூழல் நிலவி வருகிறது.
6 மாவட்டங்களில் ஒரு மாவட்ட கவுன்சிலர் இடங்களை கூட அதிமுகவால் பிடிக்க முடியாத நிலையில், கடும் பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது. அதனையடுத்து, ஒன்றிய கவுன்சிலர் தேர்தலில் திமுக கூட்டணி 190 இடங்களில் முன்னிலை வகித்து வருவதாகவும், மாவட்ட கவுன்சிலர் தேர்தலில் திமுக கூட்டணி 120 இடங்களில் முன்னிலை இருப்பதாகவும் தகவல் தெரியவந்துள்ளன. 21 ஒன்றிய கவுன்சிலர் இடங்களில் அதிமுக முன்னிலை, 7 பாமக, 5 மற்றவை, 3 மாவட்ட கவுன்சிலர் இடங்களில் அதிமுக முன்னிலை வகித்து வருகின்றன.