அமைச்சர் எல். முருகனுக்காக நான் ஓடோடி வந்தேன் - டி.ராஜேந்தர் பேச்சு
சென்னையில் உள்ள தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் 4 மாநிலங்களைச் சேர்ந்த திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில், மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சர் எல். முருகன் பங்கேற்றார். கொரோனா பாதிப்பின் காரணமாக திரைப்பட தொழில் துறை எதிர்நோக்கும் பிரச்சனைகள், பிராணிகள் நல வாரியம் சான்றிதழ் பெறுவது, தனி உரிமை பிரச்சனைகள், படப்பிடிப்புகளுக்கு எதிர்நோக்கும் ஒற்றைச்சாளர் அனுமதி, திரைப்படங்கள் மீதான இரட்டை வரிவிதிப்பு உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்த கோரிக்கை மனுவை அமைச்சர் முருகனிடம் சங்க நிர்வாகிகள் வழங்கினார்கள்.
இந்நிலியல், தயாரிப்பாளரும், இயக்குனருமான டி. ராஜேந்தர் இந்த ஆலோசனை கூட்டத்தில் பேசியதாவது -
தமிழ் மண்ணில் தமிழ் கடவுளின் பெயரில் வேலாக பாய்ந்து டெல்லிக்கு சென்று அமைச்சராக இருப்பவர் எல்.முருகன். அவரை வாழ்த்த வேண்டும் என்பதற்காகத்தான் நான் நேரில் வந்திருக்கிறேன். அவர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் நான் கலந்து கொள்ளாமல் போயிருந்தால் அது பெரும் தவறாகி இருக்கும்.
நான் வழிபடும் முருகன் பெயரைத்தான் அவர் வைத்துள்ளார். அதனால்தான் நான் ஓடி வந்தேன். தேர்தலுக்கு முன்பே எல். முருகனை சந்தித்து அவரது வேல் யாத்திரைக்கு நான் வாழ்த்து கூறினேன்.
பிரதமர் மோடி ஒரே நாடு ஒரே இந்தியா ஒரே மொழி என்று சொல்லி ஜிஎஸ்ட் வரி விதித்தார். தென்னிந்திய மொழிப் படங்கள் அனைத்தும் ஜிஎஸ்டி குறைக்க வலியுறுத்தி தயாரிப்பாளர் சங்கம் போராட்டம் நடத்தியிருந்தோம்.
மத்திய அரசு ஜிஎஸ்டி 9 சதவீதம் மாநில அரசு ஜிஎஸ்டர் 9 சதவீதமாக கேட்டார்கள். கேளிக்கை வரி கேட்க கூடாது என்று கடந்த ஆட்சியில் போராடிய பார்த்துவிட்டோம் எங்களுக்கு சோறு போட்டது தமிழ் சினிமா செத்து விட்டது. எனவே திரைப்படங்கள் எடுப்பதற்கு அரசு மானியம் பெற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.