சிவசங்கர் பாபா நீதிமன்ற காவல் - 22ம் வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவு!
பாலியல் புகாரில் சிறையில் இருக்கும் சிவசங்கர் பாபாவின் நீதிமன்ற காவலை அக்டோபர் 22ம் தேதி வரை நீடித்தது நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம், கேளம்பாக்கம் பகுதியில் சுசில் ஹரி பள்ளியை சிவசங்கர் பாபா நடத்தி வருகிறார்.
பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில், டெல்லியில் பதுங்கியிருந்த பாபாவை கடந்த ஜூன் 16ம் தேதி சிபிசிஐடி காவல்துறையினர் கைது செய்தார்கள்.
போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, செங்கல்பட்டு சிறையில் சிவசங்கர் பாபா அடைக்கப்பட்டிருக்கிறார். இந்நிலையில், பாலியல் புகாரில் சிறையிலுள்ள சிவசங்கர் பாபாவின் நீதிமன்ற காவலை அக்டோபர் 22ம் தேதி வரை நீதிமன்றம் நீடித்து உத்தரவு பிறப்பித்திருக்கிறது.
இந்நிலையில், சிவசங்கர் பாபாவை மீண்டும் 22ம் தேதி ஆஜர்படுத்தவும் செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.