பெரியாரின் பிறந்தநாளை சமூகநீதி நாளாக அறிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின் நடிகர் சத்யராஜ் நன்றி
பெரியாரின் பிறந்த நாளை சமூக நீதி நாளாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதனையடுத்து, முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நடிகர் சத்யராஜ் வீடியோ பதிவு மூலம் நன்றி தெரிவித்துள்ளார். பெரியாரின் பிறந்த நாளை இனி சமூக நீதி நாளாக தமிழ்நாடு அரசு கொண்டாடும் என்று முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் தெரிவித்தார்.
பெரியார் பிறந்த செப்டம்பர் 17ம் தேதி சமூக நீதி நாளாக கொண்டாடப்படும். சமூக நீதி நாளன்று அனைத்து அரசு அலுவலகங்களிலும் ஊழியர்கள் உறுதிமொழி எடுப்பார்கள் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
இந்நிலையில், முதல்வர் ஸ்டாலினின் இந்த முடிவுக்கு பல்வேறு தரப்பினர் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டு வருகின்றனர். அதன்படி, முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நடிகர் சத்யராஜ் வீடியோ பதிவு மூலம் நன்றி தெரிவித்துள்ளார்.
இதோ அந்த வீடியோ -
தந்தை பெரியாரின் பிறந்தநாளை #சமூகநீதி நாளாக அறிவித்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் #தளபதியார் அவர்களுக்கு நன்றி கூறும் நடிகர் திரு #சத்யராஜ்!#பெரியார் #Periyar #சமூகநீதிநாள்#CMMKStalin @mkstalin @DMKITwing pic.twitter.com/lWLu1VF4KR
— MDK Dilip B.Tech., M.B.A., LL.B (@dilipkumarmdk) September 8, 2021