சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை - நீதிமன்றம் அதிரடி
கோவை, சாய்பாபாகாலனி பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவர் கடந்த 2018ம் ஆண்டு அப்பகுதியில் உள்ள 17 வயது சிறுமியை காதலித்து திருமண ஆசை வார்த்தை கூறி கர்ப்பமாக்கினார்.
சிறுமி கர்ப்பமானது சிறுமியின் பெற்றோர்களுக்கு தெரிய வந்தது. இது குறித்து, கோவை மத்திய அனைத்து மகளிர் நீதிமன்றத்தில் புகார் கொடுத்தனர்.
இந்த புகாரை அடுத்து, பாலசுப்பிரமணியன் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணை கோவை போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதனையடுத்து, இன்று வழக்கை விசாரித்த போக்சோ நீதிமன்ற பொறுப்பு நீதிபதி ரவி, குற்றவாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனையும், 20 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 5 லட்சம் இழப்பீட்டை அரசு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.