முதல்வர் மு.க.ஸ்டாலினின் திருமண நாள் : வாழ்த்துக்களை அள்ளி தெறிக்கும் நெட்டிசன்கள்!
தமிழக முதல்வர் ஸ்டாலினும், அவரது மனைவி துர்கா ஸ்டாலினும் இன்று 46-வது ஆண்டு திருமண நாளை கொண்டாடி வருகிறார்கள்.
கடந்த மே 7ம் தேதி ஸ்டாலின் முத்துவேலர் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான் என்று சொல்லும்போது அவர் கண்கள் கலங்கியது இல்லையோ அவரது மனைவி துர்கா ஸ்டாலின் உணர்ச்சிப் பெருக்கால் கலங்கி வெடித்து அழுதார்.
ஸ்டாலின் வெற்றிக்கு மக்களின் செல்வாக்கு எந்த அளவுக்கு காரணமோ அதே போல் அவரது மனைவி துர்கா ஸ்டாலினும் மிகப்பெரிய காரணம்.
அவரும், நானும் என்ற புத்தகத்தை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு துர்கா ஸ்டாலின் வெளியிட்டார். அதில் ஸ்டாலினுக்கும் அவருக்குமான உறவு, இல்லற வாழ்க்கை குறித்து அவர் எழுதியிருந்தார்.
1975ம் ஆண்டு ஆகஸ்ட் 26ம் தேதி மு.க. ஸ்டாலின் - துர்கா ஸ்டாலின் திருமணம் நடந்தது. அப்போது மு.க.ஸ்டாலின் வயது (22). சென்னை அண்ணா சாலையில் உள்ள உம்முடி பத்மாவதி மண்டபத்தில் இவர்களது திருமணம் நடைபெற்றது. இதற்கு அப்போதைய திமுக பொதுச்செயலாளர் நாவலர் நெடுஞ்செழியன் தலைமை தாங்கி நடத்தி வைத்தார்.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மருமகள் என்ற மிகப்பெரிய பொறுப்புடன் மிகப் பெரிய குடும்பத்தில் திருமணமாகி வந்த துர்கா ஸ்டாலின் அன்று முதல் இன்று வரை ஸ்டாலினின் குடும்பத்திற்கு தன்னுடைய பங்களிப்பை சிறப்பாக செய்து வருகிறார்.
முதல்வர் மு.க. ஸ்டாலின் – மனைவி துர்கா ஸ்டாலின் திருமண நாளுக்கு திமுக தொண்டர்கள், நிர்வாகிகள் என பலரும் சமூக வலைத்தளத்தில் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.



